தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை-3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது சினிமா அனுபவங்கள் பற்றி ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது “திரைஉலகில் தொடர்ந்து நீடிக்க சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியம் ஆகும்.

இதற்கிடையில் திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் உள்ளது. ஏற்கனவே தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதேபோல் பிறமொழி திறப்படங்களிலும் பாட ஆசையாக இருக்கிறது. ஆகவே வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக எனக்குள் இருக்கும் திறமையை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.