நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது. இந்நிலையில் பார்சலை வாங்கி பிரித்த உஷாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தரம் இல்லாத கிழிந்த சேலை உஷாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனால் வேறு சில கேட்டு உஷா அந்த பார்சலை திருப்பி அனுப்பி விட்டார். இவனை தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி வந்த பார்சலை உஷா பிரித்து பார்த்தபோது கிழிந்த துணிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பார்சல் கொண்டு வந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் ஆன்லைன் செயலி நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.