திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதலைப்பட்டி மக்கள் நகரில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மினுக்கம்பட்டி பிரிவு அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் ராஜீவ் காந்தி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ் காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.