கடலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம நல்லூர் மாரியம்மன் கோவில் வீதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்வாணன் பேருந்தின் பின்பக்கப்படிக்கட்டில் என்று பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த பேருந்து எறும்பூர் பணஞ்சாலை அருகே வளைவில் திரும்ப நின்ற போது எதிர்பாராதவிதமாக தமிழ்வாணன் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தமிழ்வாணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.