அடல் பென்ஷன் யோஜனா

இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 18 -40 வயது வரை வங்கிக்கணக்கு வைத்திருக்கும் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சமாக மாத ஓய்வூதியம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 (அ) ரூ.5,000 பெறலாம்.

 மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்தகுடிமக்களுக்கான இந்த அரசாங்க திட்டம் வழக்கமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை பெற குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்குகளை பெறலாம்.

யூனிட் லிங்க்ட் காப்பீட்டு திட்டம்

ஒரு யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் காப்பீடு மற்றும் முதலீடு உள்ளிட்ட இரண்டின் நன்மைகளையும் வழங்குகிறது. பாலிசிதாரர் ஆயுள் காப்பீட்டு தொகைக்கான பிரீமியமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தவேண்டும். மீதம் உள்ளவை கடன் நிதிகள், ஈக்விட்டி பண்டுகள் (அ) பேலன்ஸ்டு பண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்

இக்கணக்கில் குறைந்தபட்சம் டெபாசிட்டாக ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில் வருடத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டம்

ஓய்வுக்கு பிறகும் வழக்கமான வருமானத்தை தரும் இத்திட்டத்தில் அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 என 2 வகையான கணக்குகளை திறக்கலாம். அடுக்கு 1 கணக்கில் செய்யப்பட்ட பங்களிப்புகளுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80CCD-ன் கீழ் வரி 1ல் விலக்குகளை பெறலாம். எனினும் அடுக்கு 2 கணக்கில் அத்தகைய பலன்கள் கிடைக்காது.