
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிரிட்டிஷ் படையின் தொடர் தாக்குதலை எதிர்த்து…. களத்தில் 11,000 மாவீரர்களோடு போரிட்டு, மாண்ட…. இந்திய நாடு மட்டுமல்ல, உலக நாட்டின் வரலாற்று பக்கங்களில் களத்தில் நின்று எதிரிகளோடு போரிட்டு மடிந்த…. இந்த தேசத்தின் விடுதலைக்கு தியாகம் செய்த மாவீரன் திப்பு சுல்தான் என்கின்ற வரலாற்று பதிவை ஆர்எஸ்எஸ், சங்பரிவார கும்பல்களே தெரிந்து கொள்ளுங்கள்..
அண்ணாமலைகளும், எச்.ராஜாக்களும், ஆரிய நாராயண்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்ல, மாவீரன் திப்பு சுல்தான், பன்முக ஆளுமை கொண்டவராக…. அலிம்புகாரி குறிப்பிட்டது போல், எதிரிகள் கூட தன் பக்கத்தில்… வரலாற்று பக்கங்களை எழுதுகிற போது….. அவரை குறித்து, விடுதலைப் போரில் இவருடைய பங்களிப்பை ஒரு காலத்திலும் இந்தியாவில்…… எந்த ஒரு வரலாற்று பேராசிரியனாலும், மறுதலிக்க முடியாது என்று அந்த எதிரிகளின் பேனா முனைகளில் தனக்கான பக்கத்தை உறுதி செய்த மகத்தான தலைவர்.
1930இல் மகாத்மா காந்தி சொல்லுகிறார், இந்து, இஸ்லாமிய ஒற்றுமையின் உருவாக்கமாக திகழ்ந்த ஒற்றை உருவம், மாவீரன் திப்பு என்கிறது மகாத்மா காந்தியின் வைர வரிகள். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகவும், மிகப்பெரிய சவாலாகவும், சுதந்திர இந்தியாவிற்கு 250 ஆண்டுகளுக்கு முன்பாக படை நடத்தி, ஏவுகணைகளை உருவாக்கி, இன்னைக்கு தன்னுடைய விடுதலைப் போரை, இந்த மண்ணில் நிகழ்த்தி காட்டிய, மகத்தான மாபெரும் வீரன் திப்பு என்பதை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அவருடைய வரலாற்று சரித்திர புத்தகங்களிலே பதிவு செய்திருக்கிறார்.