கமல் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு அ.வினோத் டைரக்டில் நடிக்கவுள்ளார். இதையடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார் கமல். நடிகராக பிசியாக உள்ள கமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க தேசிங் பெரியசாமி அப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இந்த நிலையில் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமல் முடிவெடுத்து இருக்கிறார் என கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தில் சூர்யா எப்படி ரோலெக்ஸ் ரோலில் வந்து மாஸ் காட்டினாரோ, அதேபோன்று இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிக்க கமல் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.