கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க-வினர் வரவேற்பு தெரிவித்தனர். மற்றொரு புறம் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த வருடம் பட்ஜெட் வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை என சொல்லி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்து அமர்ந்திருக்கின்றனர்.