
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக இன்னைக்கு பேசுது… திராவிடம் என்ற சொல்லே சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியங்களில் இல்லை, அது இல்ல. கால்டுவெல் சொல்லுகின்றார் ? மனுஸ்ருதியில் இருந்து தான் அந்த சொல்லை எடுத்தேன் என்று… வடக்க இருந்து நகர்ந்து.. தென் பகுதிக்கு வந்தவர்கள் எல்லாம் பஞ்ச திராவிடர் மாநாடு போட்டது யாரு ? பஞ்ச திராவிடர் மாநாடு போடுறது யாரு ? நீங்கதான் போடுறீங்க.
திராவிடம் என்ற சொல்லே அங்கு இருந்துதான் கடன் வாங்கினேன் என்றார் கால்டுவெல் சங்க இலக்கியங்களில்… தமிழ் இலக்கியங்களில்… திராவிடம் என்ற சொல் இல்லையென்பது, அம்மா நிர்மலா சீதாராமனைவிட கனிமொழி அம்மையாருக்கு நல்லா தெரியுமே… நீங்க அவங்களுக்கு பாடம் நடத்த வேண்டியது இல்லையே. நான் என்ன கேட்கிறேன் நிர்மலா சீதாராமன் கிட்ட…. தமிழ்னு சொல்லு இல்ல. சரி நீங்க தமிழர், நான் ஏற்கிறேன், பெருமைப்படுகிறேன்.
அப்புறம் ஏன் கன்னடத்தில் பதவி பிரமாணம் எடுத்தீங்க? இப்ப நான் எடுப்பேனா… நீங்க ஏன் எடுத்தீங்க? இதெல்லாம் சும்மா.. அந்த நேரத்துக்கு பேசுறது தான். தேர்தல் வரலைன்னா இப்ப அந்த காரசார விவாதம் கிடையாது. மணிப்பூர் பிரச்சனையும் பேசியிருக்க போறது இல்லை. மணிப்பூர் எரிஞ்சு 90 நாள் ஆகுது. மூணு மாசமா எரிஞ்சிட்டு இருக்கு ஆனா இப்ப பேச வேண்டிய தேவை இருக்கு என தெரிவித்தார்.