செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், 203 நாடுகளில் இருக்கிற அம்பாசிடர்ஸ் யாரு ? 203 நாடு.. அண்டார்டிகாவை தவிர… அண்டார்டிகாவில் ஒரு  நாடும்  கிடையாது….  ஆப்பிரிக்கா, சவுத் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா எல்லாத்துலயும் அம்பாசிடர்ஸ் இருக்கான் யாரு ? உன்னையும் என்னையும் வச்சி இருக்கானா ? இதுதான் சமூக நீதியா ? அம்பேத்கர் என்ன சொன்னாரு ? நம்ம  அரசியலமைப்பு சட்டம்  என்ன சொல்லுது ?

203 நாடுகளையும் உயர் சாதியினர் சொல்லப்படுற மக்கள் தான் இருக்காங்க.  என்ன நீதி ? இது தான் உங்க நீதியா ? நாங்க எல்லாம் விரல் வைத்து நக்கிட்டு போறதா ? சுதந்திரத்திற்கு போராடவில்லையா?  இவர்  ஒரு வார்த்தை சொன்னாரு அதுதான் எனக்கு ஒன்னுமே புரியல.. மோடி அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருக்கா பிறக்க வேண்டிய மனிதர் அப்படின்னு சொன்னாரு.. இதைவிட ஒரு காமெடி வேற ஏதாவது இருக்க முடியுமா ?

எங்க என்னங்க இது கொடுமை…  ஒரு ஏழைத்தாய் மகன் என சொல்கிறார்கள். இன்னைக்கு போடுற டிரஸ்ஸ அடுத்த நாளைக்கு போவதில்லை.  காலையில கழட்டி போட்டா சாயந்திரம் வேற…. 15 லட்சம்,  10 லட்சம்…. கண்ணாடி ஒன்றரை லட்சம்….  வாட்ச் 10 லட்சம் இப்படி அலைஞ்சுகிட்டு திரிருறாரு….  அது சரி ஆசைப்பட்டது…   காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி..ஆசைபட்ட போட்டு தொல..  ஆனால் நாட்டை என்ன பண்ணி வச்சிருக்கீங்க ?  2 போடி பேருக்கு வேலை கொடுத்தீங்களா ? 18 கோடி பேருக்கு இன்னைக்கு கொடுக்கணும்..  கொடுத்தீங்களா?  என கேள்வி எழுப்பினர்.