கமலின் 233 வது படத்தை வினோத் இயக்குகிறார். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தை போல இந்த படத்திலும் மல்டி ஸ்டார்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ சமீபத்தில் வெளியானது. விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2, கல்கி 2898 ஏடி ஆகிய படங்களில் கமல் பிஸியாக நடித்து வருகிறார்.

வினோத் இயக்கும் கமலின் 233-வது படத்தில் சிவராஜ் குமார் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மிலிட்டரி பின்னணியில் இந்த கதை உருவாகிறதாம். பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கலாம் என கூறப்படுகிறது. வினோத்தின் படம் தான் முதலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணிரத்தினம் படத்தின் பூஜை நடந்தது.

ஏற்கனவே அந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கமலின் 234-ஆவது படம் தான் மணிரத்தினம் இயக்கும் படம். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினமும் கமலும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடிக்கும் கல்கி 2898 ஏடி படபிடிப்பிலும் கமல் பங்கேற்று வருகிறார். இந்தப் படத்தின் மெயின் வில்லன் கமல்தான். இன்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் கமலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. வினோத் மணிரத்தினம் இருவரின் படங்களை ஒரே நேரத்தில் நடித்து கொடுத்து விட கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி முடிந்து படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.