உலகநாயகன் கமல்ஹாசன் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கமல்ஹாசன். இந்த திரைப்படத்திற்காக கமல்ஹாசனுக்கு ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. குழந்தை பருவத்தில் கமல்ஹாசன் ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் முதல் பிலிம்பேர் விருதை வென்ற மலையாள திரைப்படமான கன்னியாகுமரியில் தனது முதல் முன்னணி கதாபாத்திரம் பிரபலமாகும் வரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கமல் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்தார். அபூர்வ ராகங்கள் திரைப்படம் கமலின் நடிப்பிற்கு சிறந்த உதாரணம்.

இந்த திரைப்படத்திற்காக மற்றொரு பிலிம்பேர் விருதை வென்றார். 1970-களின் இறுதியில் கமல் ஆறு பிராந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும். அதில் நான்கு தொடர்ச்சியான சிறந்த தமிழ் நடிகருக்கான விருதுகள் அடங்கும். கமல் மைக்கேல் வெஸ்ட் மோரின் ஒப்பனை கலைஞராகவும் பயிற்சி பெற்றுள்ளார்.

2000-ஆம் ஆண்டு கடைசியாக விருது வாங்கிய கமலஹாசன் திரைப்பட அமைப்புக்கு கடிதம் எழுதி புதிய திறமையாளர்களுக்கு விருதுகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த 1984-ஆம் ஆண்டு கலைமாமணி, 1990-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2014-ஆம் ஆண்டு பத்மபூஷன் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகள் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.