
தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, கமலஹாசன் ஐயா அவர்கள் கோயம்புத்தூர்க்கு வந்திருந்தார்கள். அவர் மீட்டிங் போட வரலைங்க. ஒரு தனியார் கல்லூரிக்கு எதோ பேச வந்தாங்க. வந்துட்டு ஒரு அரசியல் மீட்டிங் போடாம இருந்தா மக்கள் தப்பா நினைப்பாங்கன்னு ஒரு ஹோட்டல்ல அரசியல் மீட்டிங் போட்டாங்க. உடனே மீட்டிங்ல என்ன சொன்னாரு?
உங்களுக்கு தெரியும் 2021இல் கமலஹாசன் ஐயா அவர்கள் இங்கு போட்டியிட்ட பொழுது சினிமால யார் நடிக்கிறாங்க ? நிஜத்துல யார் நடிக்கிறாங்க ? மக்களுக்கு யார் உழைக்கிறாங்கன்னு… சரியாக புரிந்து அக்கா வானதி சீனிவாசன் அவர்களை வெற்றி திருமங்கையாக இங்கிருந்து சட்டமன்றத்திற்கு அனுப்பிவச்சிங்க.எதுக்குமே நீங்க ஏமாறல.
கமலஹாசன் ஐயா சொல்றாங்க… விக்ரம் படத்துக்கு கூட்டம் வருது, எனக்கு கூட்டம் வராது என்கிறார். ஐயா விக்ரம் படத்துக்கு ஏன் கூட்டம் வருதுன்னா..? நீங்க நல்லா நடிக்கிறத பாக்குறதுக்காக கூட்டம் வருது. அரசியல்வாதிக்கு எதுக்கு கூட்டம் வரலைன்னா…. திமுகவை தலைகீழாக எதிர்த்த நீங்கள், இன்னைக்கு ரெட் ஜெயன்ட் மூவி படத்துல தான் நடிப்பிங்க. சகோதரர் உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்றாரோ, எந்திரினா எந்திரிப்பீங்க… உதயநிதி ஸ்டாலின் உட்காருனா உக்காருவீங்க என விமர்சனம் செய்தார்.