டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் நடந்து வருகிறது. இதனிடையே நடிகை காஜல் அகர்வாலின் ப்ரீயட் பகுதி சூட்டிங் நடைபெறுகிறது. இந்தியன்-2 படத்தின் 90 வயது கமலுக்கு ஜோடியாக வயதான பாட்டி கதாபாத்திரத்தில் காஜல் நடித்து வருகிறாராம். இதனால் இப்படத்தில் சூட்டிங்காக சுமார் 3 1/2 மணி நேரம் வரை தினசரி காஜல் அகர்வால் மேக்கப் போடுகிறாராம். அவரின் தோற்றம் நம்பமுடியாத அளவுக்கு இருக்குமென சொல்கிறார்கள்.