தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதன் பிறகு பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கலையரசன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான முப்ஃதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக பத்து தல திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழு தற்போது டீசர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது டீசர் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த டீசர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.