தமிழ் சினிமாவில் மாநகரம், மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கி தனக்கான  ஒரு இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதன் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கைதி’ திரைப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் இந்தி மொழியில் எடுக்கபடுகிறது. மேலும்  அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து  தயாரிக்கும் இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து ‘போலா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் 2-வது டீசர் வெளியாகி, சமூக வலைதளத்தில் அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.