திருவள்ளூரில் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை, வடமாநில பெண் ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் தமிழக பகுதியில் அண்மை தினங்களாக வட மாநில நபர்களின் பிரச்சனை பூதாகரமாக வெடித்து உள்ளது. அதன்படி, தன் மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு தமிழ்நாடு வந்துள்ள இவர்கள் தமிழக மக்களை தாக்கும் காட்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.  அண்மையில் திருப்பூரில் வட மாநில ஊழியர்கள் தமிழக இளைஞர்களை தாக்கிய காட்சி வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வாடிக்கையாளர் பெண்ணை, கடையில் வேலை செய்யும் வெளிமாநில ஊழியர்கள் சரமாரியாக அடித்து உள்ளனர். மேலும் இந்த அடிதடி சண்டைக்கு இடையில் சிறுவன் ஒருவனும் மாட்டிக்கொண்டு தடுமாறுவது காண்பவர்களை கலங்க வைத்திருக்கிறது.