மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறுவது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை நாங்கள் பாம்பு பிடிக்காமல் விட்டு விட்டால் அது ஊருக்குள் வந்து விடும். இது ஒரு ஆபத்தான தொழில் தான்.

பாம்பு பிடிக்கும் போது கவனமாக இல்லாவிடில் அதன் நம்மை தாக்கி விடும். எப்போ உயிர் போகும்னு சொல்ல முடியாது. ஒருவேளை பாம்பு கடித்து விட்டால் ஒரு மூலிகையை அருகில் வைத்துக் கொண்டு உடனே அதை சாப்பிட்டு விடுவோம். அதன் பிறகு உடனடியாக ஊருக்குள் வந்து பாம்பு கடித்தது குறித்து பொதுமக்களிடம் தெரிவிப்போம். இதற்காக அரசாங்கம் எங்களுக்கு ஒரு அட்டை கொடுத்துள்ளது. இந்த அட்டையை வைத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மேலும் எங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.