உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தான் இருக்கிறது எனும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காற்றுமாசு ஆய்வில் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்களானது இடம்பெற்று இருக்கிறது.

2022-ம் வருடத்திற்கான சுவிஸ் நிறுவனமான IQ Air-ன் சமீபத்திய மாசுபாடு தரவரிசை வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள(Air Pollution) முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. மேலும் 7300 நகரங்களில் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் 65 இந்தியாவில் தான் இருக்கிறது.