ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்கக் கோரி BJP தலைவர்களை சந்திக்க ADMK மூத்த தலைவர்கள் நேற்று நேரில் சென்று இருந்தனர். அப்போது கமலாலயத்தில் ADMK தலைவர்கள் அண்ணாமலை வருகைக்காக வாசலிலே காத்திருந்ததாக விமர்சிக்கப்பட்டது. இது பற்றி விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி வருகைக்காக தான் காத்திருந்தோம். ஆனால் நாங்கள் அண்ணாமலை வருகைக்காக காத்திருந்ததாக தவறாக பரப்பப்பட்டுள்ளது என்றார்.