
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இது நான் பலமுறை பல பிரஸ்மீட்ல சொல்லி இருக்கேன்…. நீங்கள் எல்லோரும் கேட்டு இருக்கீங்க…. கேப்டன் எப்ப வருவாங்க ? எப்போ கட்சியினுடைய அடுத்த கட்ட பணிகள் என்ன ? அப்படின்னு எல்லாரும் தொடர்ந்து ஏறக்குறைய ஒரு ஒன் இயர் தொடர்ந்து கேட்டுட்டு இருக்கீங்க. நானும் பதில் சொல்லிட்டு இருந்தேன். உட்கட்சி தேர்தல் முடிந்தவுடன் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் செயற்குழு – பொதுக்குழு நடக்க இருக்கிறது.
அன்றைக்கு தலைவர் அவர்கள் வந்து செயற்குழு – பொதுக்குழுவில் கலந்து கொள்வார். முக்கியமான அறிவிப்புகளை தருவார் என்று நான் ஏறக்குறைய ஓராண்டு காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன் இது திடீர்னு எடுத்த முடிவோ, திடீர்னு எடுத்த ஒரு விஷயமோ கிடையாது. நான் உங்களுக்கு பிராங்கா சொல்லணும்னா….. பத்தாம் தேதி தான் செயற்குழு – பொதுக்குழு அறிவிக்கிறதா இருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் அத்தனையும் தலைமை கழகத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் நாம் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் மிக்ஜாம் புயல் வந்து ஒரே நாளில் சென்னை நகரத்தையே நாசமாக்கிட்டு போயிருச்சு.
அதே நேரத்தில் கேப்டன் கிளைமேட் கண்டிஷன்ல வெளியே வராமல் கொஞ்சம் இரண்டு, மூன்று நாள் கழிச்சு போகலாம் என்ற மருத்துவமனை அறிவுறுத்தலில் நாங்கள் இருந்தோம். அதன்பிறகு 14ஆம் தேதி என்று டிசைட் பண்ணினோம். கேப்டன் சொன்னாரு 14ஆம் தேதி நாம வைக்கணும்னு சொல்லி…. அதன் பிறகு ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டபடி 14-ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18 ஆம் ஆண்டு செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடந்தது. இது ஒன்றும் அவசரமாக எடுத்ததோ, திடீர்னு எடுத்து முடிவோ கிடையவே கிடையாது. இது ஏற்கனவே பிளான் பண்ணுது…. அறிவித்தது 14ஆம் தேதி என்பது உங்களுக்கு கால தாமதமாக தெரியலாம் என தெரிவித்தார்.