திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின்படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டி ஆர் பி ராஜா அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு  டி ஆர் பி ராஜாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இதையடுத்து ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் டி ஆர் பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.