திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின்படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டி ஆர் பி ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை புதிய அமைச்சராக பதவியேற்ற  டி ஆர் பி ராஜா பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இதையடுத்து டி ஆர் பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது.  அதேபோன்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வள துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது