பாஜக கட்சியின் பிரமுகர் கே.டி ராகவன் இதய பிரச்சினை காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளை கே.டி ராகவனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கேடி ராகவன் ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.