உன்னாலே உன்னாலே வினய் என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் இப்போது வில்லனாக பல்வேறு படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் துவங்கி அவர் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மலையாள நடிகையான விமலா ராமன் உடன் டேட்டிங் சென்றுள்ளார். அவர்கள் காதலித்து வருவதாக அண்மை காலமாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிசெய்யும் விதமாக அவர்கள் ஜோடியாக வெளியில் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இப்போது வினய்-விமலா ராமன் இருவரும் ஹங்கேரிக்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.