ஜியோவானது தன் ப்ரீபெய்ட் திட்டங்களில் காதலர் தின சலுகையினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இதில் நிறுவனம் ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு 87 ஜிபி வரை மொபைல் டேட்டா, விமான முன் பதிவுகளில் தள்ளுபடி, இலவச பர்கர் மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

இச்சலுகையை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான MyJioல் நீங்கள் காணலாம். எனினும் இந்த சலுகை ஒரு சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் மட்டுமே கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள் மெக்டொனால்டில் ரூபாய்.199க்கு மேல் செலவழித்தால், ரூ.105 மதிப்புள்ள சிக்கன் கபாப் (அ) மெக்ஆலு டிக்கி பர்கரை இலவசமாக பெறலாம்.

கூப்பனை பயன்படுத்தி இச்சலுகையை பெறலாம். இதனை பெற நீங்கள் MyJio செயலிக்கு சென்று “Coupons & Win” என்ற விருப்பதிற்கு செல்ல வேண்டும். Jio-ன் இச்லுகை ரூ.249, ரூ.349, ரூ.899 மற்றும் ரூ.2,999 போன்ற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கிடைக்கும்.