காதல் கடிதம் தீட்டவே மேகமெல்லாம் காகிதம் என்று பாடிக்கொண்டு காதலர் கிறுக்கி கசக்கி போடும் நேரம் வந்துவிட்டது. முன்பெல்லாம் எதையாவது எழுத வேண்டும் என்று வைரமுத்து தொடங்கி என எல்லோரையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வில் 62 சதவீத இந்தியர்கள் காதல் கடிதம் எழுதுவதற்கு Chat GPT பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கடிதங்கள் எழுதும் காலத்தில் இருந்தே தானாக காதலிக்கு கடிதம் எழுதுவதை விட நண்பர்களின் உதவியோடு எழுதுபவர்கள் தான் அதிகம். இன்னும் ஒரு சிலர் நன்றாக கவிதை எழுதுபவர்களிடமிருந்து ஒரு கவிதை கடன் வாங்கி அப்படியே காதலியிடம் ஒப்பித்து விடுவார். ஆனால் காலம் மாற மாற டெக்னாலஜி துணைக்கு அழைத்து அங்கிருந்து கொஞ்சம் பிட் அடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓபன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் ஏஐ சேட் பாக்ஸ் ஆன சாட் ஜிபிடி-யை வெளியிட்டது. பலதரப்பட்ட கேள்விகளை கலந்து கேட்டாலும் அதற்கு தெளிவாக ஒரு பதில் தந்து இணையவாசிகளை குதூகலப்படுத்தி வருகிறது இந்த ஷாட் ஜிபிடி. மேலும் மருத்துவ பரீட்சையில் தேர்ச்சி பெறுவது முதல் புதிய சமையல் குறிப்புகள் வரை அனைத்தையும் சொல்லும் இதை காதலுக்கு உதவிக்கு அழைக்கலாமா..?

சமீபத்தில் Mc Afee நிறுவனம் மாடல் லவ் என்ற தலைப்பில் ஒன்பது நாடுகளில் உள்ள ஐந்தாயிரம் பேரிடம் ஒரு புதுவித ஆய்வை நடத்தியது. அதில் ஏஐ மற்றும் இணையம் எப்படி தங்கள் காதலை வெளிப்படுத்தல் என்ற கேள்விக்கு கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதில் பதில் அளித்தவர்களில் 62% பேர் சாட்டை ஜிபிடி பயன்படுத்தி காதல் கடிதங்கள் எழுத திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதிலும் இந்திய ஆண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் 27 சதவீதம் பேர் சாட் ஜிபிடி-லிருந்து உதவி பெறுவது கடிதம் அனுப்புவோருக்கு அதிகம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் 21% பேர் நேரமின்மையால் அதை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். மேலும் காதலை அழகாக வெளிப்படுத்த ஆசை இருப்பதால் சாட் ஜிபிடி பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.