சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் ஜெயேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்தினால் ஜெயிஷ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஜெயேஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயேஷ் தனது வீட்டுக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.