மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் ஆகும். இரண்டாம் கட்ட தேர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமை இன்றுடன் நிறைவு பெறுகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அப்டேட் விரைவில் வரும் என தெரிகிறது.