அட்லீ டைரக்டில் இப்போது உருவாகி வரும் படம் “ஜவான்”. ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோயினியாக நயன்தாரா நடிக்கிறார். அதோடு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் கேமியோ ரோலில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் தளபதி விஜய் கூட இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் விஜய் இதற்க்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடந்து வருகிறதாம். இந்நிலையில் ஜவான் படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், சஞ்சய் தத் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. முன்பே லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத், தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்திலும் இணைந்துள்ளார்.