இந்தியாவின் மிக வேகமான பயணிகள் ரயில்களில் ஒன்றான ராஜதானி எக்ஸ்பிரஸ், தனது முதல் வகுப்பு பயண வசதிகளால் பயணிகளை கவர்ந்து வருகிறது. மும்பையிலிருந்து டெல்லி செல்லும் பயணத்தில், பயண வீடியோகிராஃபர் ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இவர், 5,500 ரூபாய் டிக்கெட் மதிப்பில், முதல் வகுப்பு தனி கூப், குளியல் அறை மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட அற்புதமான விருந்தோம்பலை அனுபவித்ததாக கூறியுள்ளார். ரயில் பணியாளர்களின் தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பு சேவைகளும் இவரது பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த விலையுயர்ந்த டிக்கெட் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
View this post on Instagram
வீடியோவில், ராஜதானி தேஜஸ் எக்ஸ்பிரஸ் மூலம் மும்பையிலிருந்து டெல்லி சென்ற இந்த பயணி, மூன்று வேளை உணவில் பலவிதமான சிற்றுண்டிகள் மற்றும் உணவு விருப்பங்களை அனுபவித்ததாக குறிப்பிட்டார். முதல் வகுப்பு பயணிகளுக்கு குளியல் அறையும் கிடைத்தது.
இதற்கிடையில், சில நெட்டிசன்கள், “5,000 ரூபாய்க்கு விமானத்தில் பயணித்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த பயணி, “விமானத்தில் 2 மணி நேரத்தில் போயிருக்கலாம், ஆனால் நேரம் இருந்தால் இந்த ரயில் பயணத்தை ஒருமுறை முயற்சி செய்யுங்கள், மகிழ்ச்சி தரும்!” என்று கூறினார். மற்றொரு பயனர், “ராஜதானி முதல் வகுப்பு பயணம், சொந்த வீடு போல் உணர வைக்கிறது. விமான பயணம் இதற்கு இணையாகாது” என்று பாராட்டினார்.
