ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் காவலர், பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குழுவினருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா ஷெகாவத் என்று கூறப்படும் இந்தக் காவலர், நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் அருகே, சத்தமான பாலிவுட் இசைக்கு ஆடுகிறார். இந்தச் செயலால் அங்குப் போக்குவரத்து தடைபட்டு, மற்றப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
अगर आप @PoliceRajasthan में कांस्टेबल हैं, तो किसी भी हाईवे पर अपनी गाड़ी रोक कर बीच सड़क पर डांस कर सकते हैं, कोई कारवाई नहीं होगी!
ऐसा ही कांस्टेबल प्रियंका शेखावत कर रही है,
अगर यह कांस्टेबल नहीं होती तो अब तक कारवाई हो चुकी होती,
वैसे सारे नियम कानून गरीबों के लिए बने हैं। pic.twitter.com/59HJM8DYd9— Pappu Ram Mundru Sikar (@PRMundru) December 14, 2025
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரியே போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, சமூக வலைதளப் பயனர்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.
“நீங்கள் ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தால், நீங்கள் எந்த நெடுஞ்சாலையிலும் உங்கள் வாகனத்தை நிறுத்திச் சாலையின் நடுவில் நடனமாடலாம், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது!” என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.
எனினும், வீடியோவில் உள்ளப் பெண்ணின் அடையாளம் குறித்தோ அல்லது இந்தச் சம்பவம் குறித்தோ ராஜஸ்தான் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
