பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பாபுவின் வாழ்க்கை, சினிமா படங்களை விடவும் மிகவும் சுவாரஸ்யமானது.
ரமேஷுக்கு 7 வயது இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். தந்தை விட்டுச் சென்ற சலூன் கடையை அவரது உறவினர்கள் நிர்வகிக்க, ரமேஷின் குடும்பம் கடும் வறுமையில் வாடியது.
13 வயதிலேயே குடும்பத்தைக் காப்பாற்ற செய்தித்தாள் போடுவது, பால் ஊற்றுவது எனப் பல வேலைகளைச் செய்தார். பின்னர் தனது தந்தையின் பழைய சலூன் கடையை தானே எடுத்து நடத்தி, அதை ‘இன்னர் ஸ்பேஸ்’ (Inner Space) என்ற நவீன சலூனாக மாற்றினார்.
1993-ல் தான் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் ஒரு மாருதி ஆம்னி வேனை வாங்கி வாடகைக்கு விட்டார். அதுதான் ‘ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ உருவாகக் காரணமாக அமைந்தது.
