ஜெர்மனியில் மிகப் பிரபலமான ஓவியரான ராபர்ட் ரைமன் புதுவிதமான ஓவியம் ஒன்றை வரைந்து உள்ளார். இந்த ஓவியம் வெறும் வெள்ளை காகிதம் போல் காட்சியளிக்கிறது. ஜெனரல் 52″*52″ என்ற அளவில் ஒரு வெள்ளை எனாமல் கொண்டு, எண்ணெய் மற்றும் பிக்மென்ட்ஸ்களை வைத்து கண்ணாடி தூசிகளை உள்ளடக்கி வரையப்பட்ட ஓவியமாகும்.

இந்த வெள்ளை நிற ஓவியம் ரூபாய் 9 கோடி ஏலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓவியர் வெள்ளை நிறமாக இருந்தாலும் பல நிறங்கள் அதன் அர்த்தத்தில் உள்ளது என கூறுகிறார். இந்த ஓவியம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.