மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று குடிநீராகும். இந்தக் குடிநீர் தற்பொழுது ஆடம்பரப் பொருளாகவும் மாறி வருகிறது. உலகிலேயே மிக விலை உயர்ந்த குடிநீர் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த குடிநீர் பாட்டில் அழகான மின்னும் ஆபரணங்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள மிக முக்கியமான நீரூற்றிலிருந்து இந்த குடிநீர் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த குடிநீர் பாட்டிலின் விலை 1 லிட்டர் ரூபாய் 1,16,000 ஆகும். இதன் பெயர் ஃபில்லிகோ ஜுவல்லரி என்று அழைக்கப்படுகிறது. இந்த குடிநீர் பாட்டில்கள் மிகவும் தனித்துவமாக, நுட்பமான வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்டுள்ளதால் இவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறுகின்றனர். இதனை ஆடம்பரத்திற்காகவே பலரும் வாங்கி வருகின்றனர். சிலர் ஆடம்பர பொருள் சேமிப்பிற்காக வாங்குகின்றனர்.