சோசியல் மீடியாவில் பிரபலமான வெய்லா அப்ஷோங்கர் என்ற இளம் பெண் துபாயில் பாதுகாப்புக் குறித்து சோதனை நடத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் துபாயில் உள்ள பரபரப்பான சாலையில் வெய்லா சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின் முன்புறம் உள்ள பேனட்டில் தனது தங்க நெக்லஸ் மற்றும் கம்மலை வைக்கிறார். பின்னர் அங்கு செல்பவரை கவனிக்க அருகில் உள்ள கடைக்கு சென்று மறைந்து கொள்கிறார். ஆனால் அந்த வழியாக செல்பவர்கள் யாரும் தங்க நகைகளை பார்த்துவிட்டு எடுக்கவில்லை.
சுமார் அரை மணி நேரம் கழித்து, வெய்லா கூறியதாவது, அரை மணி நேரம் ஆகியும் யாரும் இந்த தங்கத்தை தொடவில்லை. துபாய் உலகிலேயே பாதுகாப்பு நாடு இல்லையா. இது மிகவும் வினோதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றதுடன் விவாதத்தையும் தூண்டி உள்ளது. சிலர் துபாயின் பாதுகாப்பை பாராட்டி உள்ளனர். ஆனால் சிலர் வீடியோவின் நம்பகத்தன்மையை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Is Dubai really this safe? Or they pay influencers for such kinda marketing? pic.twitter.com/75u80l93we
— Chirag Barjatya (@chiragbarjatyaa) December 3, 2024