இலங்கை களுத்துறை நாகொட பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். சில காலத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்துள்ளார். இவர்களது மகன், அவரது குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார். இதனால் முதியவரின் மகன் தனது தந்தையிடம் அடிக்கடி நலம் விசாரித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களாக தனது தந்தைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். ஆனால் அவரது தந்தை தனது அழைப்பை ஏற்காததால் இத்தாலையிலிருந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து பார்த்தபோது, வீடு சேதம் அடைந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி மகன், இலங்கைக்கு வந்து தந்தைக்கு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தபோது, வீடு பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து மகன் கதவை உடைத்து சோதனையிட்டபோது, எலும்பு மட்டுமே குறுகிய நிலையில், தந்தை சடலமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், எலும்புக்கூடாக மாறிய சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர் அவரது தந்தையா என்பதை உறுதிப்படுத்த டி என் ஏ சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.