செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்க வரும்போது சுழற்சி முறையில காவலர்களை பணி அமர்த்துவதால்  8 மணி நேரம் ஆண் காவலர்களுக்கு… 6 மணி நேரம் பெண் காவலர்களுக்கு…. பிரசவ நேரங்கள்ல ஓராண்டு விடுப்பு   ஊதியதோடு….  அப்படிங்குறத நாங்க சொல்லிருக்கோம்…  கேரளால அந்த முறையை கடைபிடிக்குது… வாரம் ஒருமுறை விடுமுறை விடுங்க..

சனிக்கிழமை  விடுமுறை எடுக்குறாருன்னா….  அடுத்த வாரம் அவர் ஞாயிற்றுகிழமை கொடுங்க. ஞாயிற்று கிழமை எடுக்குறவருக்கு அடுத்த வாரம் சனிக்கிழமை கொடுங்க. இப்படி மாறிமாறி வாரம் ஒரு நாளு  விடுமுறை கொடுங்க அப்படிங்குறோம். நீங்க ஆக சிறந்த கல்வியை தரமா குடுத்துட்டீங்க….  தனியாரை  தேடவேண்டியது இல்ல.

ஆக பெரும் மருத்துவத்தை உலக தரத்துக்கு அரசு கொடுத்துட்டீங்க… தனியார் தேட வேண்டியது இல்ல… பெரும் தொகை மிச்சம் ஆகிடுது. உயிரை காக்குற மருத்துவத்துக்கும் அறிவை வளர்கிற கல்விக்கும் தான் நம்மவர்கள் பெரிய முதலீடு செய்யிறாங்க.. இதுல பெரும் தொகை மிச்சம் ஆகிடுது. அப்படிங்கும்போது குறைந்தது சம்பளம் 10,000 கொடுத்தீங்கன்னா கூட….  அவங்களுக்கு செலவு இல்ல.

இது எல்லாம் அரசு பாத்துக்குது. அப்படிங்கும்போது கூடுதலாக பணியாளர்கள் எடுக்கலாம். நீங்க காவலர்களை தேடாதிங்க… குற்றமே நிகழாத சமூகம் உருவாக்குனிங்கன்னா..  காவலர்களின் பணி  தேவைப்படாது. திறந்த மதுக்கடையை திறந்து வச்சிட்டு, சட்டம் ஒழுங்கை காப்பாத்துறேன்…நான் அதை பண்ணுறேன்… இதை பண்ணுறேன்…  அங்க 1000 கொடுக்குறேன்…. மகளிர்க்கு இதை கொடுக்கிறேன்…. 1000 ரூபாய் மகளிர்க்கு….. 2லட்சத்தி 50 ஆயிரம் பேர் தாலி அறுத்து இருகாங்க….. அதுக்கு என்ன நிவாரணம் இருக்கு ? எதாவது இருக்கா..?

எல்லா குற்றங்களும் நிறைந்த மது போதையில் தான் நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுது. தெருக்கு தெரு மது கடைகளை திறந்து வச்சி இருக்கீங்க…படிப்பகங்களை திறந்தால் அறிவார்ந்த சமூகம் வரும். குடிப்பகங்களை  திறந்தால் கொலைகார சமூகம், குற்ற சமூகம், திருட்டு சமூகம் அப்படிதான் வரும். அப்பறம் போலீஸ்கிட்ட ஐயோ போலீஸ் எண்ணிக்கை குறைவா இருக்குன்னு…. நீங்க இன்னும் 5 லட்சம் போலீஸ் எடுத்தாலும் எப்படி தடுப்பீங்க? கள்ளன் பெருசா ? காப்பான் பெருசா ? என்ற  பழமொழி கேள்வி பட்டு இருக்கீறீங்க தான என தெரிவித்தார்.