செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஆற்று மணல், எம்சாண்ட்,  ஜல்லி மற்றும் சிமெண்ட் தொகை ஆகியவை  இன்றைக்கு கட்டுமானத்திற்கு பிரதானமானது. அவை கிடைக்கவில்லை.  ஆகவே இந்த கட்டுப்பாட்டை காரணமாக கூறி ஆற்று மணல்,  எம்சாண்ட் , ஜல்லி போன்றவையின் விலை 40 சதவீதம் உயர்ந்திருப்பதால் மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

சிமெண்ட் விலையை குறைப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் இன்றைக்கு எடுக்கவில்லை. 50 கிலோ எடையுள்ள மூட்டை எடையுள்ள  சிமெண்ட் 360 ரூபாய்க்கு விற்றது. இன்றைக்கு 440க்கு விற்கிறது.அதேபோல மகளிர் உரிமை தொகை. இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகின்ற பொருள். நிராகரிக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ 59 லட்சம் பேர் தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதை நம்பி இன்றைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் அதிலே கூட இந்த 11.85 லட்சம் பேருக்கு வழங்குவோம் என்று சொன்னதை வழங்கவில்லை. அதிலும் தள்ளுபடி செய்துவிட்டு இன்றைக்கு அவர்கள் வழங்குவது 7.3 லட்சம் பபயனாளிகளுக்கு மட்டும் தான் அவர்கள் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இது எதை காட்டுகிறது என்று சொன்னால்,  மேல்முறையீடு செய்கின்ற போது அந்த விதிகளை தளர்த்தினால் தான் முழுமையாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும்  கொண்டு சேர்க்க முடியும் என்பது மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். சட்டமன்றத்திலும் நாங்கள் அதை எடுத்து வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.