தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் மின் தளவாடப் பொருள்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மின்விநியோகம் பாதிப்பு தொடர்பான புகார்களை 9498792987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.