
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ இப்ப யாரு ? நீ தமிழன் இல்ல… நீ தமிங்களன். நீ ஒரு தங்கிலீஷ்காரன். தமிழோடு சமஸ்கிருதம் கலந்த ஆயிரத்து நூறு ஆண்டுக்கு முன்னாடி கண்காண்கிறோம். 1600 ஆண்டுக்கு முன்னாடி தெலுங்கு… பிறகு 500 ஆண்டு முன்னாடி மலையாளம்…. பிறகு துளு… இப்படி பிரிந்து சிதைந்து போனாய்…. ஒரு தேசிய இனம் உன் கண்ணு முன்னாடி அழிந்து போனது. இப்போது நீ அழிந்து போய்விட்டாய்…. 90 விழுக்காடு நீ தங்கிலீஷ்காரன்.
உன் தெருவில் தமிழில் இல்லை, அது தமிங்கிலம். இப்போ இல்லாட்டி எப்போ… இது விளம்பரம்…. இத எப்படி எழுதுவ ( I.P.P.O இப்போ) இப்போ சீமான் ஆட்சிக்கு வந்தா ? ஒரே அப்பு…. எப்படி ? ஏன்டா பரதேசிக்கு, பிறந்த பரதேசி மகனே… ஒன்னு ஆங்கிலத்திலே எழுது. அந்த மொழியை பெருமைப்படுத்து… . தமிழில் எழுதினால் என் தாய்மொழி தமிழிலே எழுது… என் தாய் மொழியை வாழ வை. இல்லையென்றால் தூக்கி போட்டு ஒரே மிதி, சங்கறுத்துப்புடுவேன்… அயோக்கிய பய.
சும்மா பேசிட்டே போயிடு இருப்பான் நெனச்சிட்டு இருப்பான் என்னைய…. அப்படித்தானா நெனச்ச… எல்லா பயலும் அப்படி தான் நினைச்சிட்டு இருப்பான். சும்மா மிரட்டுனாங்க…. கைதின்னு காட்டுனானுங்க…. அப்படி ஜெயில்ல போட்டுடுவாங்க…. டேய் ஜெயில் கட்டுனதே எங்களுக்கு தாண்டா.. ஜெயில் கட்டுனதே எங்களுக்கு தான். இப்ப நான் வந்து எந்த தவறும் செய்யலைங்க…. பாதி பேரு சொந்தக்காரன் போலீஸ்…. என் சொந்தக்காரன் பூராம் வக்கீலு…. வேலை யாரு குடுப்பா ? எதாவது குற்ற செயலில் நாங்களும் ஈடுபட வேண்டியது இருக்குங்க…
அந்த குற்ற செயல் கொலை செய்றது… கொள்ளை அடிக்கிறது இல்ல… மக்களின் நலனுக்காக…. எதிர்கால பாதுகாப்புக்காக.. வாழ்வுக்காக…. எங்கள் வளத்தை பாதுகாக்க… நிலத்தை பாதுகாக்க…. என் மலையை, காற்றை, நீரை பாதுகாக்க….. என் மொழியை மீட்க… நான் களத்திலே போராடும்போது சிறை என்றால் ? ஒரு திருடனை… ஒரு அயோக்கியனை… ஒரு கொள்ளைக்காரனை சிறை சிதைக்கும். ஆனால் புரட்சியாளனை…. போராடிய போராட்டக்காரனை எப்போதும் சிறை செதுக்கும். அப்படி செதுக்கப்பட்டு வெளியே வந்த போராட்டக்காரன் தான் நான் என தெரிவித்தார்.