ஆதித்யா எல் ஒன் வெண்கலம் வெற்றிகரமாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணம் செய்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை நோக்கிய இந்தியாவின் கனவு திட்டமான ஆதித்யா எல் ஒன் விண்கலம் தற்போது பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் பயணித்து வெற்றிகரமாக லெக்ராஞ்சியன் புளியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டல  பகுதியில் இருந்து விண்கலம் பத்திரமாக வெளியேறிவிட்டதாக  மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே மங்கல்யான் திட்டத்தில் இதுபோன்ற பூமியோட ஈர்ப்பு மண்டலத்திலிருந்து விண்கலம் வெற்றிகரமாக வெளியே வந்த நிலையில்,  இரண்டாவது முறையாக ஆதித்யா திட்டத்திலும் இந்த சாதனையை இஸ்ரோ நிகழ்த்திருக்கிறது. ஆதித்யா விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில் சந்திராயன் விண்கலத்தை போன்று,

அதனுடைய சுற்றுவட்ட பாதையினுடைய உயரம் அதிகரிக்கப்பட்டது.   நான்கு முறை அதனுடைய சுற்றுவட்ட பாதையை அதிகரிக்கப்பட்டு,  16 நாட்கள் தொடர்ச்சியாக பூமியை சுற்றியது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி பூமியினுடைய சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி,  லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி பயணித்தது.

லெக்ராஞ்சியன் புள்ளி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற நிலையில்,  பூமியிலிருந்து அதனுடைய பயணத்தை தொடங்கி…  தற்போது 9.2  லட்சம் கிலோமீட்டரை வெற்றிகரமாக விண்கலம் கடந்து இருக்கிறது. லெக்ராஞ்சியன் புள்ளியை அடைய இன்னும் 5.  8 லட்சம் கிலோ மீட்டர்கள் தான் இருக்கிறது.

விண்கலத்தினுடைய பயணம் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே விண்கலத்தில் உள்ள அறிவியல் ஆய்வுக் கருவிகள் சூரியனிடமிருந்து வரும் கதிரியக்கத்தை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி இருக்கும் நிலையில்,  ஆதித்யா முன்னேறி சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.