
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், தமிழீழம் எவ்வளவு பெரிய வரலாறு சுமந்து நிற்கிறதோ ….. தமிழினத்தை எதிரிகள் மட்டும் வீழ்த்தல, துரோகிகளும்தான் சேர்ந்து வீழ்த்திருக்காங்க…. அதுவும் இந்த இனத்திலே பிறந்த துரோகிகள் தான் அதற்கு பெரும் துணையாக இருந்திருக்கான்…. காலம் காலமாக இந்த வரலாறு…. அதனால் நான் இந்த ஆராய்ச்சிக்கு எல்லாம் போகல. அதற்காக நான் அதை ஆய்வு பண்ணாமலும் இல்லை….
நான் துவராகவிடம் பேசுன வரைக்கும்… அந்த குரல்… அந்த பேச்சு… அதனுடைய உள்ளடக்கம்…. நோக்கம்…. இலட்சியம்…. இதெல்லாம் தலைவர் பிரபாகரன் எப்படி எதிரி நம்மை அடிக்கடிக்க அடிக்க …. எதிரி நம்ம குடும்பத்தை அடிக்கிறான், பதிலுக்கு அவுங்க குடும்பத்தை ஒரு நாளும் அடிக்காதீங்க. என் சுயநினைவு போனால் கூட நீங்க யாரும் அவங்கபாதித்து விட கூடாது என போர்க்களத்தில் சொன்ன தலைவரை உலகத்துல பார்க்க முடியாது….
அது அண்ணன் பிரபாகரன் பெற்ற பிள்ளையின் வாயிலிருந்து மட்டும்தான் அப்படி வரும்னு நான் நம்புறேன்… அதனால நான் இப்ப சொல்றேன் என்கிறது என்னுடைய நம்பிக்கை. எதுவாக இருந்தாலும்… வருவாங்கன்னு நம்புறோம்… வரவில்லை என்றால் யார் செய்வது ? எனக்கென்ன ஈழத்தில் நிலம் இருக்கா என்ன ? பொண்ணு கொடுத்து இருக்கேனா ? எடுத்து இருக்கேனா ? ஏன் எத்தனையோ போராட்டம், சிறை….
இந்த இனத்தின் இளைய தலைமுறை அதை செஞ்சு முடிக்கணும். அதை செஞ்சி முடிப்போம்… அதனால் இது ஒரு பெரும் நம்பிக்கை….. துவாரகா வருகையை தமிழ் இனம் மட்டுமல்ல, மனித குலமே வரவேற்கும் … குறிப்பாக இந்தியா வரவேற்கணும்…. இந்தியா வரவேற்பது தமிழினத்திற்காக அல்ல…. இந்தியாவின் உடைய பாதுகாப்பிற்காக என்பது அதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.