காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்  20 ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் அடுத்த  கட்ட போருக்க்கு தயாரான இஸ்ரேல் வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் உடைய டாங்கிகள் மற்றும் தரைப்படைகள் கொண்டு வடக்கு காசாவில் நுழைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும்,  ஹமாஸின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்,  தாக்குதல் நடத்தி பின்னர் பின்வாங்கியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவரையும் விமானத்தின் மூலமாக 12,000 டன் அளவிற்கு   வெடிகுண்டுகளை வீசியுள்ள நிலையில் தரைப்படை மற்றும் கப்பல் படை தாக்குதல் இதுவரை நடத்தாமல் இருக்கிறது.  அதற்கான காரணம் என்னவென்றால் ? அமெரிக்காவினுடைய அழுத்தம் என கூறப்படுகிறது.  இருந்தாலும் இஸ்ரேல் ராணுவம் அதையும் மீறி தற்போது காசாவினுடைய எல்லை பகுதிக்குள்…  குறிப்பாக அதனுடைய பீரங்கி டங்குகள் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு உள்ளே புந்துள்ளது.

மேலும் ஹமாஸின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவத்தினுடைய  தரைப்படை மற்றும் டாங்கிகள்  தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்திய பின்னர் மீண்டும் இஸ்ரேல் உடைய எல்லைக்கே திரும்பி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தற்போது அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வடக்கு காசா நகரத்தில் 11 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஏனென்றால் தரைவழி  தாக்குதலை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்குவோம் என்கின்ற எச்சரிக்கை விடுக்கும் வகையில் தொடர்ச்சியாக காசா பகுதிகள் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விமானப்படை தாக்குதலால் காசாநகரமே உருக்குலைந்துள்ள நிலையில் தரைவழி தாக்குதலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் தரை வழி தாக்குதலை தாமதப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை வைத்திருக்கின்ற நிலையில்,  இஸ்ரேலுடைய தரைப்படை காசாவின் உடைய வடக்கு பகுதியை சூழ்ந்து இருப்பதாகவும்,  எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் என்கின்ற ரீதியிலும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில்தான் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு காசா எல்லை பகுதிக்குள் இஸ்ரேல் டாங்குகள் நுழைந்து ஹமாஸின் நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.