தமிழ் சினிமாவில் மகாமுனி, மௌனகுரு போன்ற படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது ரசவாதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை‌ பெற்ற நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் சண்டையில் சாவுறதுதான் வீரம்னு சொல்லி இருக்காங்க போன்ற வசனங்களிடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வருகின்ற மே மாதம் 10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.