தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இவர் தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி மற்றும் கமலக்கண்ணன் இயக்கும் குரங்கு பெடல் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் வீடியோவில் 5 நண்பர்கள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிடும் காட்சிகளும் அதில் யார் முதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறார்கள் என்ற காட்சியும் அழகாக இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் அடுத்து வரும் சம்பவங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்று படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.