இஸ்ரேல் – ஹமாஸ் இடையின போர் 9 நாளாக நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் நகரில் இஸ்ரேல் உடைய விமானப்படை தாக்குதலினால் இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2,300-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மரணம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  கட்டட  இடுப்பாடுகளில் சிக்கி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,  குறிப்பாக 10,000 அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாக ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில்,

காஸாவில் தற்போது மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிவதாக  கூறப்படுகிறது. காசா நகரத்தில் மின்சாரம் வழங்கப்படாத காரணத்தினால் மருத்துவமனைகளில்,  அறுவை சிகிச்சை உட்பட அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் உணவு,  தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

9ஆவது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காசாவில் மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்தோரின்  எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் இடமின்றி தீவைத்து வருகின்றனர். போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் கிடைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.மருந்து மாத்திரைகள் இன்றி தவிக்கும் பாலஸ்தீன மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த போரில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவமனைகளில் மருத்துவப் படுக்கைகள் இல்லாததன் காரணமாக அவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகங்களில் இருப்பதாக உலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மையான பாலஸ்தீனர்களும் ஹமாசின் பயங்கரவாத தாக்குதலுக்கும்  எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதால்,  அவர்களும் இந்த போரினால் பாதிக்கப்படுவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது என இஸ்ரேலை சூசகமாக தெரிவித்துள்ளார்.