தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மனித உரிமை அடிப்படையில்…  மனிதநேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பாக எகிப்து நாட்டின் வழியே அகதி மக்களாக பாலஸ்தீனர்கள் வெளியேறும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஜோ பைடன் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.   கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்குள் 7 நாட்களுக்குள் 10 லட்சம் மக்களை வெளியேற்றலாம் என ஐநா சபை தற்போது கணித்துள்ளது.

எனவே 7 நாட்களில் மக்களை வெளியேற்றும் பாதைகளில் வழித்தடங்களில் ராணுவ நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது என ஜோ பைடன் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.  குடிநீர், சுகாதாரம், உணவு மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய கவலையை UKவும் இஸ்ரேலிடம் தெரிவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தற்போது குடிநீர் வினியோகம்  மட்டும் விநியோகம் செய்வதாக கூறியுள்ளது.