இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் குறிப்பாக 1400 இஸ்ரேலிய யூதர்களை பழிவாங்கியுள்ளது. இதற்க்கு பதிலடியாக ஹமாஸ் படையினரை வேட்டையாடிய அழிப்பதற்காக நிலி  எனப்படும் சிறப்பு படைப்பிரிவை உருவாக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம்  கூறியிருக்கிறார்கள். நிலியினுடையய முக்கியமான நோக்கம் என்னவென்றால் ? ஹமாஸ் படைவீரர்கள் இருக்கும் பகுதிகளை நோக்கி கொரில்லா தாக்குதல் நடத்துவது,

மேலும் உளவு பிரிவுகள் மூலம் அவர்களுடைய நடமாட்டத்தை முழுவதுமாக கண்காணிப்பது என்கின்ற ரீதியில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நிலி பிரிவினரை பொறுத்தவரை இவர் நேரடியாக போரில் ஈடுபட மாட்டார்கள்,  ராணுவ தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். காசா பகுதிக்குள் புகுந்து, கோரில்லா தாக்குதல் நடத்துவது,  ஹமாஸினுடைய சுரங்கப்பாதைகள்,  அவர்களுடைய ஆயுதக் கிடங்குகள், ஹமாஸ் தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள்,  அவர்களுடைய நிதி ஆதாரங்களை அழிப்பதற்காக நிலி எனப்படும் தடை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிலி என்றால் ஹீரூப் மொழியில் இஸ்ரேலின் லட்சியம் பொய்க்காது என்று பொருள் வரும். இஸ்ரேலுடைய லட்சியத்தை அழிக்க நினைப்பவர்களை நாங்களும் அழிப்போம் என்கின்ற அர்த்தத்தில் தான் நிலி என்ற பிரிவை தற்போது இஸ்ரேல் ராணுவம் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் ராணுவ படை தளபதிகளாக மட்டுமல்லாமல்,  உளவு பிரிவை சேர்ந்த நுண்ணறிவு வீரர்களாகவும் இருப்பார்கள். இன்டெலிஜென்ஸ் ஏஜென்ஸாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.  ஹமாஸ் அமைப்பினருடைய ஒரு தீவிரவாதிகளை கூட மிச்சம் இல்லாமல் அனைவரையும் அழிக்கும் வரை இந்த நிலி படையினுடைய வேட்டை குறையாது என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.