ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  அக்டோபர் 7ல் நடந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் நிலி என்ற சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் ராணுவத்தில் உள்ள சிறப்பு கமாண்டோ பிரிவினரான நுக்பாவை குறி வைப்பதே முதன்மை செயல் திட்டம் எனவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஹமாஸ் போன்று கொரில்லா தாக்குதல் நடத்தவும் நீலி பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. நிலி என்றால் ஹீரூப் மொழியில் இஸ்ரேலின் லட்சியம் பொய்க்காது என்று பொருள்.